கல்லூரி வரலாறு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செஞ்சி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 2022 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் செஞ்சி ராஜா தேசிங்கு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படத் தொடங்கிய இக்கல்லூரி, தமிழ், ஆங்கிலம், வணிகவியல் (B.Com.), வணிக நிர்வாகவியல் (B.B.A.) மற்றும் கணினி அறிவியல் (Computer Science) ஆகிய ஐந்து முக்கிய பாடப்பிரிவுகளுடன் சுமார் 240+ மாணவர்களுடன் தனது கல்விப் பயணத்தை ஆரம்பித்தது. இக்கல்லூரி அண்ணாமலைப் பல்கலைக்கழகம்-யுடன் இணைவுப் பெற்ற கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
தரமான உயர்கல்வி மற்றும் கல்விசார் மேம்பாட்டை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில் கல்லூரி தொடர்ந்து செயலாற்றி வருகிறது. குறுகிய காலத...