அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செஞ்சி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 2022 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் செஞ்சி ராஜா தேசிங்கு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படத் தொடங்கிய இக்கல்லூரி, தமிழ், ஆங்கிலம், வணிகவியல் (B.Com.), வணிக நிர்வாகவியல் (B.B.A.) மற்றும் கணினி அறிவியல் (Computer Science) ஆகிய ஐந்து முக்கிய பாடப்பிரிவுகளுடன் சுமார் 240+ மாணவர்களுடன் தனது கல்விப் பயணத்தை ஆரம்பித்தது. இக்கல்லூரி அண்ணாமலைப் பல்கலைக்கழகம்-யுடன் இணைவுப் பெற்ற கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
தரமான உயர்கல்வி மற்றும் கல்விசார் மேம்பாட்டை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில் கல்லூரி தொடர்ந்து செயலாற்றி வருகிறது. குறுகிய காலத்திலேயே மாணவர்களின் கல்வி ஆர்வத்தையும், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் நம்பிக்கையையும் பெற்ற இக்கல்லூரி, கல்வித் தரம், ஒழுக்கம் மற்றும் மாணவர் முன்னேற்றம் ஆகிய துறைகளில் தொடர்ந்து சிறப்பாக வளர்ச்சி பெற்று வருகிறது. குறிப்பாக கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி பெறும் வாய்ப்பை உருவாக்குவதில் இக்கல்லூரி முக்கிய பங்காற்றி வருகிறது. மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணரும் பல்வேறு கல்வி மற்றும் இணைப் பாடத்திட்ட செயல்பாடுகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2026 ஆம் ஆண்டில் சித்தாம்பூண்டி கிராமத்தில் புதிய நிரந்தர கட்டிடம் அமைக்கப்பட்டு, தற்போது கல்லூரி அங்கு செயல்பட்டு வருகிறது. விரிவான வகுப்பறைகள், நூலக வசதி, கணினி ஆய்வகங்கள், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அமைதியான கல்விச்சூழலுடன் புதிய வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்கால கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய வளாகம், மாணவர்களின் அறிவு, திறன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்தும் சிறந்த கல்வி மையமாக திகழ்கிறது.
தற்போது சுமார் 818 மாணவர்களுடன் கல்லூரி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அறிவு, ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களை உருவாக்கும் கல்வி நிலையமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செஞ்சி தொடர்ந்து தனது கல்விச் சேவையை சிறப்பாக வழங்கி வருகிறது.
கிராமப்புற மாணவர்களுக்கு தரமான மற்றும் மலிவான உயர்கல்வி வழங்கி, அவர்களை சமூகத்திற்கு பங்களிக்கும் அறிவுசார் ஆற்றல் படைத்த குடிமக்களாக உருவாக்குவது.
ஒழுக்கம் மற்றும் சிறந்த கல்வியுடன் மாணவர்களின் சிந்தனை ஆற்றல், ஆளுமைத் திறன் மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துதல்.